பாதுகாப்பு அறிவித்தல்கள்


சுவிஸ்சலாந்து விசா விண்ணப்ப நிலையத்திற்கு வருகைத்தரும் விண்ணப்பதாரிகளுக்கான பாதுகாப்பு அறிவித்தல்கள்.

பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் விண்ணப்பதாரியோடு வருகைத்தரும் அவரின் உறவினர், நண்பர்கள் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய நபர்கள் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடலியல் ரீதியான சவால்களை எதிர்நோக்குபவர்கள் உடன் இன்னும்மோர் நபர் அனுமதிக்கப்படுவார்.

பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் விண்ணப்பதாரிகள் தங்களுடன் குடும்பத்தினரையோ, நன்பர்களையோ அல்லது பிற நபர்களையோ உலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள் அழைத்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பட்டரியில் இயங்கும் கருவிகள், இலத்திரனியல் உபகரணங்களான புகைப்பட கருவிகள், இருவட்டுகள், மடிக்கணணிகள் போன்ற இலத்திரணியல் ஊடகங்கள் தடைச்செய்யப்பட்டுள்ளது.
பிரயாணங்களின் போது உபயோகிக்கப்படும் தோலிலான பைகள், பிரிட்கேஸ் என்பனவும் அனுமதிக்கப்பட மாட்டாது. உங்களின் விண்ணப்ப படிவம் சார்ந்த காகிதாதிகள் மாத்திரமே அனுமதிக்கப்படும்.
முத்திரை இடப்பட்ட காகிதாதிகள் /பொதிகள்.
தீயை மூட்ட கூடிய சாதனங்கள்.
கூரிய கருவிகள் (கத்தரி, கத்தி போன்றவை..)
ஆயுதங்கள்.

இப் பட்டியலில் செல்லப்படாத ஏதாகினும் ஆபத்தை ஏற்படுத்தும் என பாதுகாப்பு அதிகாரிகள் கருதும் பட்சத்தில் அச் சாதனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது.

முக்கிய அறிவித்தல்.

இச் சாதணங்களை பொறுப்பேற்று பாதுகாப்பதற்கு விசா விண்ணப்ப நிலையத்தில் எவ்வித வசதிகளும் கானப்படாது எனவே அச் சாதனங்களை தவிர்க்குமாறு விண்ணப்பதாரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
 — withFathima Nasrin and 42 others in Jaffna.

Comments

Popular posts from this blog

GOHACKING.NET SOFTWARE FULL VERSION FREE DOWNLOAD