வடமாகாண சபைக்கான இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!!
கடந்த சில காலமாக பரிட்சாத்தமாக நடைபெற்று வந்த வடமாகாணத்திற்கான இணையத்தளம் (02.01.2014) வியாழக்கிழமை முதல் http://www.np.gov.lk/ என்ற முகவரியூடாக வடமாகான ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் அவரது அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த இணையத்தளத்தில் வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் அலுவலகம், பிரதம செயலாளர் அலுவலகம், கல்வி, கலை பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம், விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம், மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வணிகத்துறை அமைச்சின் அலுவலகம், சுகாதார அமைச்சின் அலுவலம் ஆகியவற்றின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
Comments
Post a Comment